ஆதமின் மகனே!
அல்லாஹ்வின் திருபெயரால் ..............
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!
''ஓ ! ஆதமின் மகனே! நான் உனக்குக் கொடுத்தவற்றைக் கொண்டு நீ திருப்தி கொள்வாயாயின், உன் உள்ளத்தை அமைதி பெறச்செய்வேன் .
அவ்வாறின்றி, நான் உனக்குக் கொடுத்தவற்றைக் கொண்டு திருப்தி கொள்ளாவிடின், உலகத்தை உன் மீது சுமத்திவிடுவேன்,, உலகம் எனும் மாயையில் விலங்குகள் அசைபோடுவது போன்று நீயும் அலைந்து திரிவாய்!
என் அடியானே! என் கண்ணியத்தின் மீதும் வல்லமையின் மீதும் ஆணையாகக் கூறுகிறேன்.
நான் உனக்கென்று விதித்ததை தவிர, வேறு எதனையும் மிகுதியாக உலகில் பெற்றுக் கொள்ளமாட்டாய்!
விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையில் சிறகினைக் கட்டிபறந்து நீ முயன்றிடினும் , பங்கிடப்பட்டதைவிட ஒரு முடக்கும் நீரைக்கூட அதிகமாக பெற்றுக்கொள்ள மாட்டாய்! என நபி [ஸல்] அவர்கள் நவின்றார்கள்.
உனக்கொரு நண்பன் வேண்டுமென நீ விரும்பினால் அல்லாஹ் உனக்குப் போதுமானவன்.
உனக்குகொரு நெருங்கிய தோழன் தேவையாயின் குர் ஆனைப்பற்றிப் பிடித்துக்கொள்!
உனக்கோர் அறிவுரையாளன் [உபதேசி] தேவையாயின் , மரணத்தை நினைவு கூர்ந்து கொள்!
நீ இவ்வையகத்தில் வாழ விரும்பினால் இருப்பதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்! இந்நான்கில் ஒருவன் உறுதி கொள்ளாவிடின் அவனுக்கு நரகம் போதுமானது.
மேலும் , க ஃ புல் அஹ்பார் [ரலி] அவர்கள் அறிவிக்கின்றார்கள் ..
ஓ ! ஆதமின் மகனே! என்னுடைய 'கஸானா ' எனும் கருவூலம் ஒருபோதும் குறையாது,, என்னுடைய கருவூலம் நிறைவுடையதாகும். எனவே, நீ காலமெல்லாம் உனக்குரிய உணவு தப்பிவிடும்,, கிடைக்காது போய்விடும் என்று அஞ்சிக் கொண்டிராதே!
ஓ ! ஆதமின் மகனே உன்மீது ஆணை! நான் உன்னை விரும்புகிறேன்,, என்மீது ஆணை நீ என்னை விரும்புவாயாக!
ஓ ! ஆதமின் மகனே! 'சிராத்துல் முஸ்தகீம் ' என்னும் பாலத்தை உன்னிருகால்களுள் கடந்து சென்று சுவனத்தை அடையும் வரை என்னுடைய வேதனையை விட்டும் அச்சம் தீர்ந்திடாதே!
அனைத்துப் பொருள்களையும் உனக்காக படைத்துள்ளேன் ,, எனினும் உன்னை எனக்காக படைத்துள்ளேன் .
என்னுடைய ஆட்சி இருக்கும் காலமெல்லாம் என்னையன்றி வேறு எவருக்கும் அஞ்சாதே!
உன் பொருட்டு என் மீது சினங்கொள்ளாதே ! எனினும் என் பொருட்டு உன்னையே நீ சினந்து கொள்!
'அர்ஷு தொடுத்து, 'தஹ் தஸ்ஸ ரா ' [மண்ணுக்கடியில்] உள்ள அனைத்துப் பொருள்களும் என்னைத் தேடுகின்றன, நான் உன்னை தேடுகிறேன் ,, நீயோ என்னை விட்டு வெருண்டோடுகின்றாய் !
நீ என்னைத் தவிர வேறு எவரையும் நெருங்கிட நினையாதே நீ என்னை எப்பொழுதும் தேடினாலும் கண்டுகொள்வாய்!
நான் உன்னை ஒருதுளி விந்திலிருந்து படைத்தேன் ,, உனக்குரிய உணவைக் கொடுக்காமல் விட்டிடவில்லை , உணகுரியவைகள் அனைத்தும் துவக்கத்திலேயே எழுதப்பட்டன.
என்னுடைய 'களா ' என்றும் கற்பனையை ஏற்காமலும் , என் புறத்தால் உனக்கேற்படும் துன்பத்திற்குப் பொறுமைகாட்டாமலும் என்னுடைய அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமலும் இருப்பாயாயின், என்னுடைய விண்ணிற்குக் கீழ் தங்காமல் வேறொரு இறைவனைத் தேடிக்கொள்!
அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன்!
அல்லாஹ் மிக அறிந்தவன்

Comments
Post a Comment