எனது ஈமானின் ஈடேற்றம் எதிலுள்ளது
அல்லாஹ்வின் திருபெயரால் .........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கு உரித்தாக !
பகைவனிடம் அறிவுரையை ! அறிவிலியிடம் ஊழியத்தை! நற்செயல் இன்றியே சுவனம் புகுவதை ! பெண்ணிடம் உண்மையையும், வாக்குறுதி நிறை வேற்றுதலையும் ! உலகப் பற்றோடு இறைவனைத் தேடுவதையும் எதிர் பார்க்காதீர்கள் !
உன் நாவைப் பேணி, மனத்தைத் தடுத்துக் கொள்வாயாக! நீ செய்த பாவங்களை நினைத்து அழு !
நீங்கள் மனிதர்களை மிகுதியாக நினைப்பதைவிட அல்லாஹ்வை மிகுதியாக நினைவு கூர்ந்திடுங்கள் .
நீங்கள் உலகத்தை மிகுதியாகச் சிந்திப்பதைவிட மறுமையை மிகுதியாக சிந்தியுங்கள் .
நீங்கள் செய்த நன்மைகளை நினைப்பதைவிட நீங்கள் செய்துவிட்ட பாவங்களை நினையுங்கள்.
உலகில் நீண்ட நாட்கள் உயிர் வாழவேண்டும் என்று எண்ணுவதைவிட , மரணத்தை மிகுதியாக எண்ணுங்கள்.
பிறரின் குற்றங் குறைகளைப் பற்றிச் சிந்திப்பதைவிட உங்களில் நிகழ்ந்துவிட்ட குற்றங் குறைகளை நினையுங்கள்.
மூன்று செயல்கள் புகழப்பட்ட நற்குணத்தை சார்ந்த தாகும் .
துன்பத்தில் உழல்பவருக்கு [தேவையுடையவருக்கு] உதவி செய்வது.
நம்முடன் நட்புறவு கொண்டவர்களால் அவர்கள் மூலம் நிகழ்ந்துவிட்ட தீய செயலை மன்னிப்பது.
எல்லாரிடத்திலும் பணிவு காட்டுவது, ஆகிய இம்மூன்று தன்மைகளும் புகழப்பட்ட நற்குணங்களாகும் .
என்னுடைய 'தீன் [மார்க்கம்] சலாமத் பெறுவது எதிலுள்ளது ?
தீன் சலாமத் பெறுவது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் உள்ளது.
எனது ஈமானின் ஈடேற்றம் எதிலுள்ளது?
பொய், புறம், வீண்பேச்சுக்கள், தீயவற்றை மொழிதல் ஆகியவற்றை விட்டும் உம்முடைய நாவைப்பேணிக் கொள்ளும் , அதில்தான் உம்முடைய ஈமானின் ஈடேற்றம் உள்ளது.
என் ஆன்மா சலாமத் பெற்றிடவும் தூய்மை பெற்றிடவும் விமோசனம் எதில் உள்ளது?
உலகத்தின் மீது பேராசை கொள்வதையும் உலகிலுள்ள இன்பங்களை அனுபவிப்பதைத் தவிர்த்து கொள்வதிலும் இருக்கின்றது .
அல்லாஹ் மிக அறிந்தவன்

Comments
Post a Comment